View in English

 

உறுதிமொழி

ஹூஸ்டன் பெருநகர வளாகத்தில் தமிழ்மொழி கற்க விரும்பும் மக்கள் அனைவருக்கும் சாதி, மதம், நாடு, நிறம், மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நற்றமிழ்க் கல்வி வழங்க ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி அமைப்பு உறுதி பூண்டுள்ளது.
பள்ளி பற்றிய விவரம்

ஹூஸ்டன் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில், 2001 ஆம் தொடங்கி, தமிழ் ஆர்வலர்களால் தமிழ்மொழி கற்றுக்கொடுக்கும் பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் பயிலவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருவதோடு அதற்கான பாடத்திட்டங்கள், பள்ளி அமைப்புகள் என தமிழ்ப்பள்ளிகளின் மொத்த வளர்ச்சியும் நல்ல முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பெரிய வளர்ச்சியின் காரணமாக ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி (Greater Houston Tamil School) என்ற புதிய அமைப்பு ஹூஸ்டனில் ஆகஸ்ட் 2012ல் உருவாகியிருக்கிறது. இது அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் (அ.த.க.) உறுப்பினர் பள்ளியாக அங்கம் வகிக்கிறது. இதன்படி அ.த.க.வின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதோடு முன்மழலை முதல் மூன்ராம் நிலைவரை அ.த.க.வின் பாடநூல்களையும் பயன்படுத்துகிறது.

ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் நோக்கத்தையும், எதிர்பார்ப்புகளையும் மனமுவந்து செயல்படுத்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட பியர்லேண்ட் தமிழ்ப்பள்ளி, கேட்டி தமிழ்ப்பள்ளி, உட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி, சுகர்லாந்து தமிழ்ப் பள்ளி,  மேற்கு கேட்டி தமிழ்ப்பள்ளி, சைப்ரஸ் தமிழ்ப்பள்ளி மற்றும் பியர்லேண்ட் தமிழ்ப்பள்ளியின் துணைப்பள்ளியாக கிளியர்லேக் பள்ளி என ஏழு கிளைப்பள்ளிகள் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர் பள்ளிகளாக ஹூஸ்டன் புறநகர்ப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏழு பள்ளிக்கிளைகளிலும் சேர்த்து மொத்தம் 530 குழந்தைகள் இவ்வாண்டில் தமிழ் மொழி கற்று வருகிறார்கள். முன்மழலை என்ற ஆரம்ப நிலையிலிருந்து எட்டாவது நிலைவரை மொத்தம் 9 நிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

ஏழு தமிழ்ப்பள்ளிகளிலும் சேர்த்து எழுபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் தன்னார்வம் கொண்ட தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பக்கபலமாக பள்ளி ஒருங்கிணைப்பார்கள், பொருளாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் போன்ற பொறுப்புகளில் ஏராளமான தன்னார்வத் தொண்டர்கள் பள்ளிக் கட்டமைப்பைக் கட்டிக்காக்கவும், பள்ளிகளை நடத்திச் செல்லவும் உதவுகிறார்கள்.

தன்னதிகாரம் கொண்ட பள்ளிகளின் வசதிக்கேற்ப வார இறுதிநாட்களில், சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள் நடைபெறுகிறது. பொதுவாக ஒவ்வொரு வகுப்பும் 2 மணிநேரம் நடைபெறுகிறது. இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 25 நாட்கள் பாடம் நடத்தத் திட்டமிடப்பட்டு நடந்துவருகிறது. கல்வியாண்டின் இறுதியில் குழந்தைகளிடையே பலவிதமான தமிழ்ப் போட்டிகள் நடத்தி ஆண்டு விழாவில் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்குவதும் தமிழ்ப்பள்ளியின் நோக்கமாக ஹூஸ்டனில் நடந்து வந்து கொண்டிருக்கிறது.

குறள்வழித் தமிழ் கல்வி நலமாகுமே! –அதை
முறைப்படி கற்றால் வாழ்வு வளமாகுமே!

ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி நிர்வாகக்குழு

(2022-2023)

திரு. நாகராஜன் சின்னதுரை (தலைவர்)
திரு. கரு.மாணிக்கவாசகம்  ( செயலாளர்)
திரு. அசகர் பீர் முகமது (பொருளாளர்)
திரு. சந்திரமௌலி ஆறுமுகநாடார் (துணைத் தலைவர்)
திரு. சதிஷ் குமார் (இணைச் செயலாளர்)
திரு. நாகேந்திரா ஹரிபிரசாத் (இணைப் பொருளாளர்)
திருமதி. பத்மலட்சுமி நடேசன்(பியர்லேண்ட் தமிழ்ப் பள்ளி முதல்வர்)
திரு. ஆனந்த் ரத்தினசாமி  (பியர்லேண்ட் தமிழ்ப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)
திருமதி. சுதா சங்கரநாராயணன் (கேட்டி தமிழ்ப் பள்ளி முதல்வர்)
திரு.குமார் நடராஜன் (கேட்டி தமிழ்ப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)
திரு. மிதுன் இராஜகுமார் (உட்லேண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி முதல்வர்)
திரு. பிரேம்குமார் ஆனந்தகிருஷ்ணன்(உட்லேண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)
திரு. கோகுல் பரமேஷ் நாகராஜன் (வெஸ்ட் ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி முதல்வர்)
திரு. சக்திவேலன் அன்பழகன் (வெஸ்ட் ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)
திருமதி. யமுனா ரவி (சுகர்லாந்து தமிழ்ப் பள்ளி முதல்வர்)
திரு.சந்திரசேகர் (சுகர்லாந்து தமிழ்ப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)
திரு. சங்கர் கோபாலகிருஷ்ணன்(மேற்கு கேட்டி தமிழ்ப் பள்ளி முதல்வர்)
திரு. கைருன்னிஷா ஷுஐப் (மேற்கு கேட்டி தமிழ்ப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)

திரு. கரு. மலர்ச்செல்வன்  (நிறுவனர்)
திரு. கோபால் கிருஷ்ணன் (நிறுவனர்)
திரு. கரு.மாணிக்கவாசகம் (நிறுவனர்)
திரு. ஜெகன் அண்ணாமலை (ஆலோசகர் )